ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது தனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.