இந்துச் சகோதரர்களின் போர்: மாபெரும் கிரிக்கெட் போட்டி 

சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் இடையில் இந்து சகோதரர்களின் போர் (Battle of the Hindu Brothers) என்னும் பெயரில் கிரிக்கெட் போட்டி முதல் முறையாக எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

அதனைத்தொடர்ந்து இரு பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான 20-20 போட்டியும் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறும். 

நூறுக்கு ஆண்டுகள் பழமை வாய்ந்த இரு பாடசாலைகளின் இந்த கிரிக்கெட் தொடர் ஆரம்பமானது இப் பாடசாலைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply