கோல்டன் கேட் கல்யாணி எனப் பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் முதலாவது உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய களனி மேம்பாலம் பொது மக்களின் பாவனைக்காக இன்று (24/11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய களனி பாலமானது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் கொழும்பு முனையிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டத்தினை சென்றடைந்து, அங்கிருந்து ஒருகொடவத்தை இங்குருகொட சந்தி மற்றும் துறைமுக நுழைவாயில் வரை 4 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.