முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் 34,000 பேர் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.