எதிர்க் கட்சியுடன் கூட்டணியமைக்கும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 

பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் தலைமையிலான அரசியல் குழுக்கள், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான முறைமைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும், எதிர்வரும் தேர்தலின் போது புதிய அரசியல் அமைப்புக்கள் உருவாக்கப்படுவது சாத்தியம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினுடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட போதும், பின்னர் ஆளும் தரப்பிலிருந்து விலகி எதிர்க் கட்சியுடன் இணைந்து கொண்டனர். 

Social Share

Leave a Reply