சம்பள நெருக்கடிக்கு தீர்வுகளை பெற்றுத் தருமாறு கோரி ஒன்றிணைந்த ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.
இதன் முதற்கட்டமாக இன்று(12.06) முதல் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மதிப்பீட்டுப் பணிகளிலிருந்து விலகவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.