வவுனியாவில் கிரிக்கெட் பயிற்சி முகாம்

கிராமங்கள் தோறும் கிரிக்கெட் எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் இலங்கை ரூபாவாகினி கூட்டுத்தாபனனும் இணைந்து நடாத்தும் கிரிக்கெட் முகாம் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் 120 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக வவுனியா கிரிக்கெட் சங்க தலைவர் யோகேந்திரன் ரதீபன் தெரிவித்துள்ளார்.

“எமது வவுனியா மாவட்டத்தில் இலை மறைகாயாகவுள்ள கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் செயற்பாடானது மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யங்ஸ்டார் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலிருந்து 120க்கும் அதிகமான வீர வீராங்கனைகள், பாடசாலை பயிற்சியாளர்கள், மாவட்ட பயிற்சியாளர்கள் மற்றும் மாகாண பயிற்றுவிப்பாளர்கள் கொண்டனர்” என ரதீபன் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply