தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பாரிய நெருக்கடியில்.. 

நாட்டிலுள்ள தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படும் தருவாயில் இருப்பதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்  தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த கேஸ் லைட்டர்களினால் (gas lighter) தீப்பெட்டி உற்பத்தி பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த கேஸ் லைட்டர்கள், எரிவாயு தீர்ந்தவுடன் பயனற்றுப்போகின்றமை சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இத்தகைய கேஸ் லைட்டர்களின் பாவனை அதிகரிக்கப்படுவதால், தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் காணப்படுவதாக தீப்பெட்டி உற்பத்தி நிறுவனமொன்றின் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கண்டி, குண்டசாலையில் உள்ள தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் பெருமளவான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Social Share

Leave a Reply