ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும், அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார.
அத்துடன் அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய உயர் தொழில்நுட்பத்துடன் தென்கிழக்கு ஆசியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்யாணி பொன் நுழைவாயில் திறப்பு விழாவில் நேற்று (24/11) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்துரையாற்றுகையில், ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற, அவசியான மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளதென்றும் எடுத்துரைத்தார்.