ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ் வடமராட்சியில் நேற்று (15.06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடத் தான் தயாராகவுள்ளதாகவும் தன்னைவிட மிகச் சிறந்த ஒரு வேட்பாளரை தமிழ் மக்கள் பொதுச் சபை தெரிவு செய்யுமானால் அந்த வேட்பாளருக்காகத் தான் களமிறங்கி பணியாற்றுவேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.