ஜேர்மனியில் இலங்கை நேரப்பபடி இன்று அதிகாலை ஆர்மபித்த ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட தொடரில் இன்று சுவிற்சலாந்து, ஹங்கேரி அணிகள் மோதின.
ஜேர்மனி, கொலேன் இல் நடைபெற்றது. போட்டி ஆரம்பித்தது முதல் சுவிற்சலாந்து அணியின் ஆதிக்கம் காணப்பட்டது. 12 ஆவது நிமிடத்தில் டுஹா அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது. இரண்டவது கோலை எபிஷர் 45ஆவது நிமிடத்தில் அபாரமான முறையில் பெற்றுக்கொடுத்தார். சுவிற்சலாந்து ஆதிக்கம் மேலோங்கியிருந்த நேரத்தில் ஹங்கேரி அணி சார்பாக வர்கா கோலை அடித்து போட்டியினை விறு விறுப்பான நிலைக்கு எடுத்துச் சென்றார். போட்டி நிறைவடைய சில நிமிடங்கள் இருந்த வேளையில் எம்போலோ சுவிற்சலாந்து அணிக்கு மூன்றாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.
ஐரோப்பா கிண்ண தொடரின் முதற் போட்டியில் ஜேர்மனி அணி 5-1 என ஸ்கொட்லாந்து அணியை வெற்றி பெற்றுள்ளது. அடுத்த போட்டியாக ஸ்பெய்ன் குரேசியா அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.