மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் 100,000 இற்கும் அதிகமானோர்
தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தனது மியன்மார் விஜயத்தின் போது இந்த விடயம் தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.
மியன்மாருக்கான விஜயத்தை நிறைவு செய்து அமைச்சர் நேற்று நாடு திரும்பினார்.
இதன்படி மியன்மாரில் இணைய குற்றச்செயல்கள் இடம்பெறும் பகுதியில் 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களை விரைவில் மீட்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.