வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த பாகிஸ்தான் 

டி20 உலகக் கிண்ணத் தொடரை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. அமெரிக்கா, புளோரிடாவில் இன்று(16.06) நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அயர்லாந்து அணி சார்பில் டெலானி 31  ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் ஷஹீன் அப்ரிடி, இமாத் வசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

107 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அணித் தலைவர் பாபர் அசாம் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அயர்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் பாரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி3 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார். டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் 4 போட்டிகளில், இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள பாகிஸ்தான் அணி ‘A ‘ குழாமின் தரவரிசையில் 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நிறைவு செய்துள்ளது. 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் குழாம் ‘A’யிலிருந்து இந்தியா, அமெரிக்கா அணிகளும், குழாம் ‘C’யிலிருந்து ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும், குழாம் ‘B’யிலிருந்து அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகளும், குழாம் ‘D’யிலிருந்து தென்னாப்பிரிக்கா அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு அணிக்கு மாத்திரம் சூப்பர் 8 சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

Social Share

Leave a Reply