ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விசேட வழிகாட்டுதல்களுடன் கூடிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.
அதில், வருடாந்தம் 10 க்கு மேற்படாத வகையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியாக நியமிக்கப்படுபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.