மிஹிந்தலைக்கு இலவச ரயில் சேவை   

பொசன் போயா தினத்தை முன்னிட்டு மிஹிந்தலைக்கு பயணிக்கும் பக்தர்களுக்காக எவ்வித கட்டணமுமின்றி இன்று(17.06) முதல் விசேட ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விசேட ரயில் சேவையானது அனுராதபுரம் – மிஹிந்தலை இடையே சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மஹவ நோக்கி ரயிலில் வரும் பயணிகளுக்காக, மஹவ புகையிரத நிலையத்தில் இருந்து அனுராதபுரம் வரை விசேட பஸ் சேவையை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மஹவ மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையாததால், இவ்வருடம் பொசன் போயவுக்கு குறித்த பாதையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பக்தர்களின் வசதிக்காக மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையில் 400 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. 

இதேவேளை, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு இடையிலான புகையிரத பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இன்று காலை முதல் ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply