உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் ஆலோசனைகளை கோரியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான பொதுமக்களின் எழுத்துபூர்வ கருத்து மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 8ம் திகதி வரையும், வாய்மூல கருத்து எதிர்வரும் ஜூலை 9ம் திகதியும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டதன் பின்னர் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு, எதிர்வரும் ஜூலை மாதம் 15ம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.