டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று(19.06) காலை நாட்டை வந்தடைந்தனர்.
முதல் சுற்றின் 4 போட்டிகளில் பங்குபற்றியிருந்த இலங்கை அணி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டியிருந்ததுடன், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினையும் இழந்தது.
“இலங்கை அணி வீரர்கள் சரியாக விளையாடமையினால் டி20 உலகக் கிண்ண தொடரிலிருந்து இருந்து வெளியேற நேரிட்டது. அணித் தலைவர் மற்றும் இலங்கை அணி வீரர் என்ற வகையில் இதற்காக வருந்துகின்றேன். கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகியவற்றில் ஒரு அணியாக சிறப்பாக செயல்படவில்லை” என இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(19.06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டியுள்ளார்.