கொழும்பு – அவிசாவளை வீதியில் ரணால பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றும்
நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று பகல் (19.06) இடம்பெற்றுள்ளது.
மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கொழும்பிலிருந்து லபுகமுவ நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான தனியார் பஸ் எம்பிலிபிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நவகமுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.