நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன், வெலிஓயா பிரதேசத்தில் நேற்று (21.06) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சரத்பொன்சேகா கோரியவாறு ஜனாதிபதி வேட்புமனு வழங்கப்படாமையால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அவர் விமர்சித்து வருகிறார்.
”சரத் பொன்சேகா அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் விமர்சிப்பவர்.
இராணுவ மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைய தயாராகி வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வே வெற்றியை பெறுவார் ”என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார்