25% வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயார் நிலையில்..! 

இலங்கையிலுள்ள வைத்தியர்களுள் 25 வீதமானவர்கள் வெளிநாடுகளில் வேலைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சைகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2022ம் மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1,800 மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.  

2021ம் ஆண்டு பரவிய கொவிட்-19 தொற்று நோயை தொடர்ந்து இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், சராசரியாக 200 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட வங்குரோத்து நிலை, பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக 2022ம் ஆண்டு முதல் வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தரவுகளுக்கமைய, இலங்கை சுகாதார கட்டமைப்பிலுள்ள வைத்தியர்களுள் குறைந்தபட்சம் 25 வீதமானவர்கள் வெளிநாடுகளில் வேலைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சைகளுக்கு தோற்றி சித்தியடைந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply