இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன உடன் அமுலுக்கு வருகையில் பதவி விலகியுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
மஹேல ஜெயவர்தன, அவரது பதவிக் காலத்தில் இலங்கை அணியிலும், உயர் செயல்திறன் மையத்தின்(High-Performance Center) கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பதவிக் காலத்தில் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஶ்ரீ லங்கா கிரிக்கெட், அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் வெளியிட்டுள்ளது.