தமிழ் பொது வேட்பாளர்: தமிழர்களின் அபிவிருத்திக்கு தடை 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது தமிழ் மக்களையும், அவர்களுக்கான அபிவிருத்திகளையும் பின்னோக்கி கொண்டு செல்லுவதற்கான செயற்பாடு என பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் எந்த வேட்பாளர் முன்னிலையில் உள்ளாரோ அவருடன் தான் பேரம் பேச வேண்டும் எனவும், ஏனையவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் ஊடாக நாம் இழப்பினை எதிர்நோக்க வேண்டும் என்றும் வவுனியாவில் நேற்று(27.06) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார். 

ரணில் விக்ரமசிங்க, சஜித், அனுர ஆகியோரே தேர்தல் போட்டியில் முன்னிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், குறித்த நபர்களுடன் கலந்துரையாடி எமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply