LPL – காலி அணிக்கான இலக்கை நிர்ணயித்தது யாழ்ப்பாணம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளின் முதற் போட்டி ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குஷல் மென்டிஸ் 4 ஓட்டங்களுடன் ஷகூர் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க பத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு நல்ல அடித்தளத்தை வழங்கினார். நிஸ்ஸங்க 51(33) ஓட்டங்களை பெற்ற வேளையில் டுவைன் பிரட்டோரியஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிலி ரொசோவ் 01 ஓட்டத்துடன் 07 பந்துகளில் ஆட்டமிழந்தார். யாழ் அணிக்கு இது பின்னடைவு ஏற்படுத்தியது.

அவிஷ்க பெர்னாண்டோ நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பாடி யாழ் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்திக் கொடுத்தார். 59(48) ஓட்டங்களைப் பெற்ற வேளையில் டுவைன் பிரட்டோரியஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அணியின் தலைவர் சரித் அசலங்க 33(15) ஓட்டங்களுடன் ஷகூர் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தனஞ்சய டி சில்வா 18(08) ஓட்டங்களுடன் இசுரு உதானவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்ளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

காலி அணியின் பந்துவீச்சில் ஷகூர் கான் 04 ஓவர்களில் 34 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். இசுரு உதான 60 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். டுவைன் பிரட்டோரியஸ் 04 ஓவர்களில் 23 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார்.

அணி விபரம்
கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், மால்ஷா திருப்பதி, , இசுரு உதான

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், ரிலி ரொசோவ், பேபியன் அலன், தனஞ்சய டி சில்வா, ப்ரமோட் மதுஷான், ஜேசன் பெஹ்ராண்டோப், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க

Social Share

Leave a Reply