LPL – கொழும்பு,கண்டி மோதல் ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான இன்று(02.07) இரண்டாவது போட்டியில் கண்டி பல்கோன்ஸ், கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.

கண்டி அணி நேற்று நடைபெற்ற தம்புள்ள சிக்சேர்ஸ் அணியுடனான போட்டியில் கண்டி அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் களமிறங்கவுள்ளது. கொழும்பு அணி தமது முதற் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளது.

அணி விபரம்

கண்டி மூன்று மாற்றங்களை செய்துள்ளது. சத்துரங்க டி சில்வா, மொஹமட் ஹஸ்னைன், சமத் கோமஸ் ஆகியோரை நீக்கி அஹா சல்மான், கஸூன் ரஜித்த, பவான் ரத்நாயக்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், அஹா சல்மான், கஸூன் ரஜித்த, பவான் ரத்நாயக்க

கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், ஷெவோன் டானியல், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, முஹமட் வசீம்

Social Share

Leave a Reply