லாங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாளின் இரண்டாம் போட்டி கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ், கோல் மாவல்ஸ் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய காலி அணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல அதிரடியாக துடுப்பாடி மிகச் சிறந்த ஆரம்பத்தை மேற்கொண்டார். 17 பந்துகளில் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். 71 ஓட்டங்களாக ஆரம்ப இணைப்பட்டாம் காணப்பட்ட வேளையில் பினுர பெர்னாண்டோவின் பந்துவீச்சில் அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஷதாப் கானின் பந்துவீச்சில் டிக்வெல்ல 50(18) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பானுக ராஜபக்ஷ முதற் பந்திலேயே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து காலி அணி கட்டுப்படுத்தப்பட்டது. ஜனித் லியனகே 02 ஓட்டங்களுடனும், ரிம் செய்பெர்ட் 05 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க 100 ஓட்டங்களை தாண்டுவார்களா ஏன்டா கேள்வி எழும்பியது. ஆனால் ஷகான் ஆராச்சிகே, இசுரு உதான ஜோடி அதிரடி நிகழ்த்தி அணியை மீட்டனர். 87 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்தனர். ஷகான் ஆராச்சிகே 35(27) ஓட்டங்களையும், இசுரு உதான 52(34) ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் கோல் மார்வல்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீசில் ஷதாப் கான் 4 (04 – 21/4)விக்கெட்களையும், பினுர பெர்னாண்டோ 2 (4- 22-3)விக்கெட்ளையும், மதீச பத்திரன 01 (04-22/4)விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இரு அணிகளும் தாம் விளையாடிய முதற் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெறுமணி முதலிடத்தை பெற்றுக் கொள்ளும். இன்றோடு சகல அணிகளும் தலா இரண்டு போட்டிகளை பூர்த்தி செய்யவுள்ள நிலையில் கண்டியில் நடைபெறும் இறுதிப் போட்டி இதுவாகும்.
அணி விபரம்
இரு அணிகளும் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களோடு இன்றைய போட்டியில் விளையாடுகின்றன.
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், ஷெவோன் டானியல், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, முஹமட் வசீம்
கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், மால்ஷா திருப்பதி, இசுரு உதான