கிளிநொச்சியில் தர்மபுரம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் இன்று (26/11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இராஜகிரிய பிரதேசத்தில் வைத்து நுகேகொடை, மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தர்மபுரத்தை சேர்ந்த 20 – 28 வயதுகளையுடைய நபர்களே இவ்வாறு கைத செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்கள் சம்பவம் இடம்பெற்று ஒன்றரை மாதங்களின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.