இந்த வருடத்திற்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கும் மேலும் ஒரு இலங்கை மெய்வல்லுனர் வீரர் தகுதி பெற்றுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமில் 6வது நபராக தகுதி பெற்றுள்ள அருண தர்ஷன, ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
மேலும், நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரேன் நெட்டசிங்க ஆடவருக்கான பூப்பந்தாட்ட போட்டியில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கவுள்ளார்.
ஆசிய சாதனையாளர் தருஷி கருணாரத்ன, மகளிருக்ககான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதிப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், தில்ஹானி லேகம்கே மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
நீச்சல் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல்(Freestyle) பிரிவில் கைல் அபேசிங்கவும், மகளிருக்கான 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவில் கங்கா செனவிரத்னவும் பங்கேற்கவுள்ளனர்.
2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ், பாரிஸில் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.