லங்கா பிரீமியர் லீக் தொடரில் போட்டி விதிமுறைகளை மீறியதன் காரணமாக இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கண்டி அணித் தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் கொழும்பு அணியின் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக லங்கா பிரீமியர் லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது ஆடை மற்றும் உபகரண விதிமுறைகளை மீறியமைக்காக கண்டி அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு போட்டி கட்டணத்தில் 25 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2ம் திகதி கொழும்பு மற்றும் கண்டி அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொழும்பு அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ நடுவர்களை அவமதிக்கும் விதமாக செயற்பட்டதன் காரணமாக போட்டி கட்டணத்தில் 20 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பினுர பெர்னாண்டோ ஆடை மற்றும் உபகரண விதிமுறைகளை மீறியதற்காகவும் போட்டி கட்டணத்தில் 25 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.