ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாக முன்னே போகும்..

மஞ்சள் நிற ஆடையில் ஜொலிக்கும் யஷிகா ஆனந்தின் அண்மைய புகைப்படங்கள்.

கடந்த ஜூலை மாதம் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்தார யஷிகா ஆனந்த். விபத்தில் அவரின் பெண் தோழி ஒருவரும் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் விபத்துக்கு பிறகு நான்கு மாதங்கள் சிகிச்சையில் இருந்த யஷிகா ஆனந்த் தற்போது முழுமையாக குணமாகி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.

நடிகை யஷிகா ஆனந்த் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படம் மூலம் பிரபலமானார். அதையடுத்து கழுகு 2 ஆகிய படங்களில் நடித்தார்.

பின்பு பிக்பாஸ் சீசன் – 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் யாஷிகாவிற்கு இரசிகர் கூட்டம் அதிகரித்தது. ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்த நிலையிலே, எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் சிக்கியிருந்தார்.

இந்நிலையில் 4 மாத தீவிர சிகிச்சையின் பின்னர் உடல் நலம் தேறி, முதல் முறையாக நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாக முன்னே போகும்..
ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாக முன்னே போகும்..
ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாக முன்னே போகும்..
ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாக முன்னே போகும்..

Social Share

Leave a Reply