தலைமை பதவியை துறந்தார் வனிந்து ஹசரங்க

இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து வனிந்து ஹசரங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட்டின் நலன் கருதி தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, வீரராக மாத்திரம் அணியில் தொடர்ந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

அணியின் தலைமைக்கும், இலங்கை அணிக்கும் ஆதரவாக செயற்படுவதாக வனிந்து ஹசரங்க தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட், வனிந்து ஹசரங்க இலங்கை அணியின் முக்கிய வீரராக இருப்பார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

Social Share

Leave a Reply