டெல்லி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி விலகல் 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட ரிக்கி பான்டிங் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பான்டிங், 2018ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக டெல்லி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளார். 

பான்டிங் வழிகாட்டுதலில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 2020ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரை சென்றிருந்தது. 

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் புதிய  தலைமை பயிற்றுவிப்பாளர் தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. 

Social Share

Leave a Reply