LPL: கொழும்பு, காலி மோதல் ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் மார்வல்ஸ் அணிக்கும், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு இடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பில் நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

தரவரிசையில் 6 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் 3ம் இடத்திலுள்ள கொழும்பு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை உறுதி செய்துகொள்ளும். 

இறுதி லீக் போட்டியில் பங்கேற்கும் காலி அணி முன்னதாகவே இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. 

அணி விபரம், 

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, இசுரு உதான, சதீஷ ராஜபக்ஷ, ஜெப்ரி

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் – திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, அஞ்சலோ பெரேரா, முஹமட் வசீம், இசித விஜேசுந்தர

Social Share

Leave a Reply