மருந்துகள் கொள்வனவில் 800 மில்லியன் ரூபா நிலுவை 

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்காக விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 800 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது. 

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து தாம் பெற்றுக் கொண்ட தகவல்களினுடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply