ஆசியக் கிண்ணம்: தாய்லாந்து அணிக்கு வெற்றி 

மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் தயால்லாந்து அணி இலகுவில் வெற்றியீட்டியது. 

தம்புள்ளையில் இன்று(20.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தாய்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தாய்லாந்து அணி சார்பில் நன்னபட் கொஞ்சரோஎங்கை(Nannapat Koncharoenkai) 40(35) ஓட்டங்களையும், பன்னிட மாயா(Phannita Maya) 29(28) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

மலேசியா அணி சார்பில் பந்துவீச்சில் மஹிரா இஸ்மாயில்(Mahirah Ismail) 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

134 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. மலேசியா அணி சார்பில் வான் ஜூலியா(Wan Julia) 52(53) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 

தாய்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஒன்னிச்சா கம்சோம்பு(Onnicha Kamchomphu) 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, இந்த போட்டியில் குழு ‘பி’ உள்ள தாய்லாந்து மகளிர் அணி 22 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகியாக தாய்லாந்து அணியின் நன்னபட் கொஞ்சரோஎங்கை(Nannapat Koncharoenkai) தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply