LPL – யாழ் அணி சிறந்த துடுப்பாட்டம்

லங்கா பிரீமியர் லீகே தொடரின் ஜப்னா கிங்ஸ் மற்றும் மற்றும் கண்டி பல்கோன்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது தெரிவுகாண் போட்டி இன்று (20.07) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

குஷல் மென்ட்ஷின் அபார துடுப்பாட்டம் மூலம் யாழ் அணி வெற்றி பெறக்கூடிய இலக்கை தொட்டுள்ளது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக துடுப்பாடி வந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தமை யாழ் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பத்தும் நிஸ்ஸங்க 18(20) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 11(10) ஓட்டங்களையும் பெற்றனர். ரிலி ரொசவ் 07(06) ஓட்டங்களையும், சரித் அஸலங்க 04(06) ஓட்டங்களையும் பெற்றனர். குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 105(54) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது அவரின் இரண்டாவது 20-20 சதமாகும். அத்தோடு 20-20 போட்டிகளில் பெற்றுக்கொண்ட கூடுதல் ஓட்ட எண்ணிக்கையும் ஆகும். மேன்டிஸோடு இறுதி நேரத்தில் அஷ்மதுல்லா ஒமர்ஷாய் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி அதிரடியாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியமை யாழ் அணியின் ஓட்ட அதிகரிப்புக்கு கைகொடுத்தது. அவர் ஓட்டங்களுடன் 26(13) ஆட்டமிழந்தார்.

யாழ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.

கண்டி அணியின் பந்துவீச்சில் சத்துரங்க டி சில்வா 4 ஓவர்களில் 22 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும், ரமேஷ் மென்டிஸ் 2 ஓவர்களில் 10 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். வனிந்து ஹசரங்க 4 ஓவர்களில் 41 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மொஹமட் ஹஸ்னைன் 4 ஓவர்களில் 48 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி காலி அணியுடன் நாளை (21.07) இறுதிப்போட்டியில் மோதும்.

அணி விபரம்

கண்டி பல்கொன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், மொஹாமட் ஹஸ்னைன், கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், ரமேஷ் மென்டிஸ், சமத் கோமஸ், சதுரங்க டி சில்வா

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, ரிலி ரொசோவ், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, பேபியன் அல்லென், தனஞ்சய டி சில்வா, அஸ்மதுல்லா ஒமர்ஷாய், விஜயகாந்த் வியாஸ்காந்த், ஜேசன் பெஹ்ரன்டோப்

Social Share

Leave a Reply