லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி நான்காவது தடவையாக வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டி ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் மார்வலஸ் அணிகளுகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமாதச மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய காலி அணி தடுமாறி பின்னர் வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது. 185 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய யாழ் அணியின் முதல் விக்கெட் முதல் பந்திலேயே வீழந்தது. பத்தும் நிஸ்ஸங்க வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த குஷல் மென்டிஸ், ரிலி ரொசவ் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்துக் கொடுக்க யாழ் அணியின் வெற்றி வாய்ப்பு இலகுவானது. சத இணைப்பாட்டத்தையும் பூர்த்தி செய்தனர். அவ்வாறே போட்டியையும் நிறைவு செய்தனர். இவர்கள் பெற்றுக்கொண்ட இணைப்பாட்டமே LPL போட்டியில் பெறப்பட்ட கூடுதல் இணைப்பாட்டமாகும். குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 72 (40) ஓட்டங்களையும், ரிலி ரொசவ் ஆட்டமிழக்காமல் 106(53) ஓட்டங்களையும் பெற்றனர். இது அவரின் எட்டாவது 20-20 சதமாகும்.
15.4 ஓவர்களில் 01 விக்கெட்டை இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
டுவைன் பிரட்ரோரியஸ் 2.4 ஓவர்களில் 18 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.
துடுப்பாட்டத்தை ஆரம்பித்த காலி அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்து தடுமாறியது. ஜேசன் பெஹ்ரன்ட்டொப் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லவை 05(08) ஓட்டங்களுடனும், அலெக்ஸ் ஹேல்ஸ் 06(09) ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க செய்தார். ஏழாவது ஓவரில் 24 ஓட்டங்களை பெற்ற வேளையில் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஜனித் லியனகே 07(08) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பானுக்க ராஜபக்ஷ நிதானமாக ஆரம்பித்து அதிரடி நிகழ்த்தி காலி அணியை மீட்டு எடுத்தார். ரிம் செய்பெர்ட்டும் அவருக்கு கைகொடுத்த்து இணைப்பாட்டம் ஒன்றை வழங்கினார். இருவரும் 62 ஓட்டங்களை பகிர்ந்தனர். செய்பேர்ட் 47(37) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பானுக்கவுடன் ஜோடி சேர்ந்தார் ஷகான் ஆராச்சிகே. 72 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட செஹான் ஆராச்சிகே 16(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பானுக ராஜபக்ஷ 82(33) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். டுவைன் பிரட்ரோரியஸ் 12(10) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
காலி அணியின் துடுப்பாட்டத்தில் முதல் 10 ஓவர்களில் 48 ஓட்டங்கள் மட்டுமே பெறப்பட்டன. 20 ஓவர்கள் நிறைவில் காலி அணி 06 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.
யாழ் அணியின் பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரன்ட்ஒப் 4 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். அசித்த பெர்னாண்டோ 4 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். அஹ்மதுல்லா ஒமர்ஷாய் 03 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்களை கைப்பற்றினார். வியாஸ்காந்த் 3 ஓவர்களில் 39 ஓட்டங்களை வழங்கினார்.
இரு அணிகளும் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளன. மூன்று தடவைகளும் யாழ் அணியே வெற்றி பெற்றுள்ளது.
அணி விபரம்
ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, ரிலி ரொசோவ், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, பேபியன் அல்லென், தனஞ்சய டி சில்வா, அஸ்மதுல்லா ஒமர்ஷாய், விஜயகாந்த் வியாஸ்காந்த், ஜேசன் பெஹ்ரன்டோப்
கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, பிரபாத் ஜயசூரிய, இசுரு உதான,கவிந்து நதீஷான்