2024ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு உத்தியோகபூர்வமாக வௌியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் இடாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேவைக்கேற்ப வாக்காளர் இடாப்பை அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் திகதி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் 23ம் அல்லது 24ம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.