கடந்த 14 நாட்களாக தடை செய்யப்பட்டுள்ள 6 நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வகை ஓமிக்ரான் காரணமாக நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட நாடுகளிலிருந்து எவரேனும் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்களா என்பதை கண்டறிய விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
