இலங்கை-இந்தியா தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று ஆர்மபமாகிறது. இரு அணிகளுக்குமிடையிலான மூன்று 20-20 போட்டிகள் அடங்கிய தொடரின் முதற் போட்டி இன்று கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆர்மபிக்கவுள்ளது. உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் சிம்பாவே அணியுடன் ஐந்து 20-20 போட்டிகளில் விளையாடி தொடரை வென்றதன் பின்னர் இலங்கைக்கு இந்தியா அணி வருகை தந்துள்ளது.

சரித் அசலங்க இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையிலும் இலங்கை அணி இந்த தொடரில் களமிறங்கவுள்ளது. இதன் காரணமாக இலங்கை அணி மீது எதிர்பார்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்படாத நிலையில் இடைக்கால பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரியாவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி விளையாடவுள்ளது. நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் பிரகாசித்தவர்கள் இந்த தொடரில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை இலங்கை அணிக்கு பலமாக இருக்குமென நம்பப்படுகிறது.

இந்தியா அணியின் பயிற்றுவிப்பாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின்னர் இந்தியா அணிக்கான முதற் தொடர் இது. சூர்யகுமார் யாதவ் 20-20 அணிக்கு ஏற்கனவே தலைமை தங்கியுள்ள நிலையில் அவர் நீண்ட கால தலைவராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இந்தியா அணி மாற்றங்களுடன் விளையாடும் நிலையில் இந்த தொடர் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

இரு அணிகளும் 29 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் 19 வெற்றிகள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இலங்கை அணிக்கு 9 வெற்றிகள். ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்து. இலங்கையில் இரு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் 5 போட்டிகளில் இந்தியா அணியும், 3 போட்டிகளில் இந்தியா அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இன்று(27) முதற் போட்டி நடைபெறும் நிலையில், நாளை இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. 30 ஆம் திகதி மூன்றாவது நடைபெறவுள்ளது.

அணி விபரம்

இந்தியா

சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அஹமட், மொஹமட் சிராஜ்

இலங்கை

பத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், குஷல் ஜனித் பெரேரா, கமிந்து மென்டிஸ், தஸூன் சானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுசங்க, டுனித் வெல்லாலகே, பினுர பெர்னாண்டோ, டினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, சமிந்து விக்கிரமசிங்க, அசித்த பெர்னாண்டோ

Social Share

Leave a Reply