உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை நடாத்தும் 9வது இறகுப்பந்து உலகக் கிண்ணம் இன்று(31.07) இலங்கையில் ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதி வரை 11 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஆடவர் மற்றும் மகளிருக்கான இறகுப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த போட்டியின் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துகொண்டிருந்தார். கௌரவ விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜாவும் கலந்துகொண்டிருந்தார்.
புலம்பெயர் நாடுகளிலிருந்து 100 அதிகமான வீர, வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையிலிருந்தும் அதிகளவான வீர, வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.