சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.
இந்தச் சந்திப்பு (01.08) இன்று இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் நான்காம் கட்டம் தொடர்பில் இந்தச் சந்திப்பின்
போது அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.