முட்டை இறக்குமதி: அரசாங்கத்தை குற்றம்சாட்டும் உற்பத்தியாளர்கள்

விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உரிய முறைமையை தயாரிக்காமல் முட்டைகளை இறக்குமதி செய்வதன் ஊடாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் போது முட்டை, கோழி இறைச்சி என்பன தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply