யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது இன்று (29/11) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொட்டடி பகுதியைச் சேர்ந்த நபரொருவரை கைது செய்துள்ளதுடன், தாக்குதல் நடாத்திய வேளையில் குறித்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.