வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல் – தெளிவுபடுத்திய ஆணைக்குழு  

வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல் - தெளிவுபடுத்திய ஆணைக்குழு  

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்கள், எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்கினை பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இத்தகைய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள், தங்களின் வாக்காளர் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு மாறாக வேறு எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply