பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகினார்

பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகினார்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியுள்ளார்.

அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து பதவி விலகிய அவர், நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து மாணவ தலைவர்களால் சிவில் ஒத்துழையாமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தின் பின்னர் இம்மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply