வவுனியா – நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் ஆசிரியர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய அவர் இன்று காலை (05.08)சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.