பொருளாதார பிரச்சினையின் பங்குதாரர் ரணில் – சரிதஹேரத்

பொருளாதார பிரச்சினையின் பங்குதாரர் ரணில் - சரிதஹேரத்

இம்முறை ஜனாதிபதி தேர்தல் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களை விட மிக முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06.08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் பல்பரிமாண மாற்றம் ஒன்றை நாடு வேண்டியிருக்கும் வேளையில் இந்த ஜனாதிபதி தேர்தல் நடப்பதாகவும்
மறுபுறம் நான் தான் இந்த நிலையில் இருந்து காப்பாற்றினேன் என்று பொய்களை சமூகமயப்படுத்தும் போக்கை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொருளாதார மீட்சி தொடர்பான பொய்யான விடயங்களை சமூகத்துக்கு காண்பிக்கிறார்.
அவர் மீட்சியாளர் அல்ல. அவரும் இந்த பொருளாதார பிரச்சினையின் பங்குதாரர் தான்.

வேறுயாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. அதனால் நான்பதவியை ஏற்றுக்கொண்டேன் என கூறுவது முற்றிலும் பிழையான கருத்தாகும். நிபந்தனைகளுடன் சஜித் கடிதம் அனுப்பினார். அதை பொருட்படுத்தவில்லை. சரத் பொன்சேகா தனது விருப்பத்தை தெரிவித்தார். அதற்கும் கடந்த அரசாங்கம் செவிசாயக்கவில்லை. அவர்களாக கொடுத்த பதவியை தானாக ஏற்றுக்கொண்டார் அவ்வளவு தான்.

ரணில் விக்ரமசிங்கவிடம் எந்த தீர்வும் இல்லை. தீர்வுகளுக்கு அவர் பதிலாக அமையவில்லை. பிரச்சினையின் பங்குதாரர் தான் ரணிலும். பொருளாதார மீட்சி தொடர்பாக அவர் பொய்யான தோற்றப்பாடுகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறார்.

தலைமைத்துவம், வேலைத்திட்டம் மற்றும் சிறந்த அணி என்பவற்றை கொண்ட தரப்பினாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும். இது ஐக்கிய மக்கள் சக்தி தலமையிலான கூட்டணியிலயே காணப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி என்பது வெறுமனே இலக்கங்களை கொண்ட ஒன்றல்ல. அது மக்கள் சார்ந்ததுமாகும். பொருளாதார வளர்ச்சி காணப்படுமாக இருந்தால் அது மக்களிலும் பிரதிபலிக்கும். ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கும் சிறிய தரப்பினரோடு மாத்திரம் இந்த பொருளா சுருங்கியதல்ல. ஒட்டு மொத்த மக்களிடமும் இந்த பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். அது தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியாகும். மக்களை விடுத்து இலக்கங்களில் கவனம் செலுத்துவதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது.

ஒட்டுமொத்த மக்களையும் இலக்காக கொண்ட பொருளாதார வளர்ச்சியையே சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி முன்னெடுத்துள்ளது. நட்புவட்டார நண்பர் கூட்டத்தை மாத்திரம் போஷிக்கும் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கையால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மக்கள் எங்களுக்கு முக்கியம் இதுவே சஜித்துக்கும் ரணிலுக்கும் இடையிலான வித்தியாசமாகும்

Social Share

Leave a Reply