தென்னிந்திய வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணி, சேலை அணிந்து நூலகத்திலிருந்து புத்தகம் வசிப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
டிக் டாக் மூலம் பிரபலமான காவ்யா அறிவுமணி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீரியலில் சிறு கதாபாத்திரத்துடனுடாக சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவின் மறைவு பின்னர் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மிகவும் பிரபலமானார். இதனுடாக வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனின் உதவியாளரான அருண் இயக்கத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ‘ஊர்க்குருவி’ என்ற படத்தில் காவ்யா அறிவுமணி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடும் காவ்யா அறிவுமணி, அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் இரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.