இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட இலங்கை குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

இம்முறை இலங்கை டெஸ்ட் குழாமுக்கு, வேகப்பந்து வீச்சாளர்களான நிசல தாரக்க மற்றும் மிலன் ரத்நாயக்க இருவரும் முதன்முறையாக இணைத்துக்கொள்ள பட்டுள்ளதுடன், ஜெப்ரி வன்டர்சே மீண்டும் இலங்கை டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். 

ஜெப்ரி வன்டர்சே இறுதியாக 2022ம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் பங்கேற்றிருந்தார். இருப்பினும், இந்தியா அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பான பந்து வீசிய அவர், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். 

இலங்கையின் துடுப்பாட்ட வரிசையில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படாத நிலையில், பத்தும் நிஸ்ஸங்க மாத்திரம் மீண்டும் டெஸ்ட் அணிக்கு இணைத்துக்கொள்ள பட்டுள்ளார். 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 21ம் திகதி இங்கிலாந்து, மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2023 -2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 4ம் இடத்திலும், இங்கிலாந்து அணி 6ம் இடத்தில் உள்ளது. 

இலங்கை குழாம்: தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, நிசன் மதுஷ்க, பத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்ரம,  அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, லஹிரு குமார, நிசல தாரக்க, மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மென்டிஸ், ஜெப்ரி வன்டர்சே 

Social Share

Leave a Reply