
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பெயரிடப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (08.08) காலை தமிழ் பொது வேட்பாளரை அறிவிப்பதற்கான கூட்டம் நடைபெற்றது.
இதன்போது தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினருமான என்.ஸ்ரீகாந்தா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
07 தமிழ் கட்சிகளும் 07 சிவில் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டதுடன் தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காகக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
இந்த குழு கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளது.